பிக் பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வாங்கிய மொத்த சம்பளம்!

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களின் ஆதரவு இம்முறையும் தொடர்வதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் இந்தவாரம் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருக்கிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதன்படி ராபர்ட் மாஸ்டர் 14 லட்சம் வரை சம்பளம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kamal Haasan, robert master, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 6, ராபர்ட் மாஸ்டர்,