நவம்பர் 5ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பழம்பெரும் பாலிவுட் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய உடலில் உள்ள ஒரு சில உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழந்த நிலையில் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு வயது 77.

இந்தநிலையில் நடிகர் விக்ரம் கோகலே இந்தி தெலுங்கு மராத்தி மற்றும் என்று பல மொழிகளில் நடித்தவர் என்பதும் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஹே ராம்’ மற்றும் ‘ஆளவந்தான்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் கோகலே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில் அவருடைய மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேடையில் தொடங்கி,திரையில் தன் நடிப்புக் கலையை நிலைநிறுத்தியவர் விக்ரம் கோகலே. ஆளவந்தான்,ஹேராம் சந்தர்ப்பங்களில் அவரது திறனை ரசித்திருக்கிறேன்.உடல்நலிவால் மருத்துவமனைக்குச் சென்ற இந்த மாதத்தின் தொடக்கத்திலும் அவரது படம் வெளியாகும் அளவு நடிப்பை நேசித்தவர்.அவருக்கு என் அஞ்சலி.
— Kamal Haasan (@ikamalhaasan) November 26, 2022
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.