‘தளபதி 67’ திரைப்படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கா? உரிமையை வாங்கிய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thalapathy 67, Vijay, Logesh Kanagaraj, 26th Nov 2022

இந்தநிலையில் தற்போது ’தளபதி 67’ திரைப்படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் என்றும் அந்த படத்தின் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுவது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் தற்போது இந்த படம் ’A History of Violence’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் ‘தளபதி 67’ என்றும் தமிழுக்கு ஏற்றவாறு இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thalapathy 67, Vijay, Logesh Kanagaraj, 26th Nov 2022

பிரபல அமெரிக்க நடிகர் விக்கோ மோர்டென்சென் நடித்த இந்த படத்தின் கதை என்பது ’மனைவி மற்றும் குழந்தை என சாதாரண குடும்ப வாழ்க்கை நடத்தி வரும் ஹீரோ திடீரென ஒரு வன்முறையை நிகழ்வு ஒன்றில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன் பிறகு அவர் அண்டர்வேல்ர்டு உலகில் நுழைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் கதை.

மேலும் இந்த படத்தை தமிழுக்காக சில மாற்றங்கள் செய்து அதில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் கேரக்டர்களையும் புகுத்தி ’தளபதி 67’ படமாக அவர் இயக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.