துணிவு படத்தில் பாடல் பாடிய நடிகை!

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடித்த ’துணிவு’ படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Manjuwarior, Thunivu, Ajith, Jipran, 26th Nov 2022

இந்த படத்தின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டில் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனமும் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் 3 பாடல் இடம்பெற்று உள்ளதாகவும் நடிகை மஞ்சுவாரியார் அதில் ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மஞ்சுவாரியர் தனது சமூக வலைத்தளத்தில் ஜிப்ரான் இசையில் ’துணிவு’ படத்தில் ஒரு பாடலை பாடியது தனக்கு திரில்லிங் அனுபவமாக இருந்தது என்றும் இந்த பாடலை கேட்க அனைவரும் தயாராக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜிப்ரானுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் நடிகை மஞ்சுவாரியர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ’துணிவு’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மஞ்சுவாரியர் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.