விஜய்யின் ‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் தேதி குறித்த மாஸ் தகவல்

பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தபடத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Vijay, Varisu, Thaman, Simbu, 26th Nov 2022

இந்த பாடலில் சிம்பு மற்றும் தமன் உள்ள காட்சிகளும் இருப்பதாகவும் இந்த பாடல் நிச்சயம் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு மிகச் சிறந்த விருந்தாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது ஒரு புரமோஷன் பாடல் என்றும் மேலும் இந்த பாடலின் புரமோ வீடியோ டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay, Varisu, Thaman, Simbu, 26th Nov 2022

இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.