‘தளபதி 67’, ‘கைதி 2’ படங்களுக்கு அடுத்து இயக்குனர் லோகேஷின் அடுத்த படம்: ஹீரோ யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ இதனை அடுத்து கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Logesh Kanagaraj, Prabhas, Vijay, Kaithi, Karthi, Thalapathy 67, 26th Nov 2022

லோகேஷ் கனகராஜ் ’மாநகரம்’, ‘கைதி’, ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நிலையில் இதனை அடுத்து விஜய் மட்டுமின்றி இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் ’தளபதி 67’ படத்தை இயக்க உள்ளார்.

’தளபதி 67’ படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகின்றது.

Logesh Kanagaraj, Prabhas, Vijay, Kaithi, Karthi, Thalapathy 67, 26th Nov 2022

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி லோகேஷ் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், பான் இந்தியா திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த படமும் லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.