‘எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு’ – மக்கள் செல்வனின் ‘டிஎஸ்பி’ ட்ரைலர்!

பொன்ராம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘டிஎஸ்பி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Ponram, Vijay sethupathy, DSP, D Imman, 26th Nov 2022

இந்த படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரி கேரக்டரில் மிடுக்காகவும் அதே நேரத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளில் பொருத்தமாகவும் ஆக்ஷன் காட்சிகளிலும் அடித்து தூள் கிளப்பியுள்ளார் என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

Ponram, Vijay sethupathy, DSP, D Imman, 26th Nov 2022

அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி காதல் என அவரது முந்தைய படங்களின் பாணியிலேயே இந்த படமும் அமைந்திருக்கிறது என்பதால் இந்த படமும் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பப்படுகின்றது.

டி. இமான் இசை அமைத்துள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தம், தீபா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். மொத்தத்தில் இந்த படத்தின் டிரைலரில் இருந்து ‘டிஎஸ்பி’ திரைப்படம் விஜய்சேதுபதிக்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.