விரைவில் டும் டும் டும் – அதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் ஆவார். கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17, 1992 இல் சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா.

இவரது நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தாய், தந்தை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து விட்டார்களாம். இதனால் தான் நடிப்பை விட்டு விலக கீர்த்தி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறித்த நான்கு படங்களை தவிர்த்து வேறு எந்த ஒரு படத்தையும் இதுவரை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யவில்லை. கீர்த்தியை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை யார் என்பது குறித்து எந்த ஒரு தகவல் இதுவரை வெளிவரவில்லை.

நடிப்பில் இருந்து விலகினாலும், தயாரிப்பில் களமிறங்கி நல்ல படங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளாராம் கீர்த்தி.

விரைவில் டும் டும் டும் - அதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்