விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டு குடும்பத்தின் அருமையை பற்றி எடுத்துறைக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த சித்ரா இறந்ததால் நடிகை காவ்யா முல்லையாக நடித்துவர அவரும் சொந்த காரணங்களால் வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் காயத்ரி படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் இதனால் தொடரில் நடிக்க நேரம் இல்லை என்பதால் விலக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
