சூர்யா 42 படக்குழு இலங்கை செல்லாது – வெளியான புதிய தகவல்

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சூரியா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சேர்ந்து தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினியாக நடிக்க, ஆனந்தராஜ், கோவை சரளா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் பல இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் ஒன்று, சூர்யா 42 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் கிடைத்த தகவல்களின் படி சூர்யா 42 இலங்கை செல்லாது என்றும் இது தேவையற்ற பல சிக்கல்களை உருவாக்கும் என்றும், இது இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும் வேலை என்பதால் குறிப்பாக ஈழ ஆதரவர்களிடம் இருந்தும் எதிர்ப்பை எதிர்கொள்ளலாம் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 42 படக்குழு இலங்கை செல்லாது - வெளியான புதிய தகவல்