மீண்டும் தொடங்கும் ‘வணங்கான்’ படப்பிடிப்பு

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த ’வணங்கான்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் யோகிபாபுவால் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Vanankan, Yogibabu, surya, Surya 42 , Bala, 24th Nov 2022

சூர்யாவின் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் சூர்யாவுடன் யோகிபாபு நடிக்க வேண்டிய நிலை இருப்பதால் யோகிபாபுவின் கால்ஷீட்டுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்ற நிலையில் யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்பட பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் கால்ஷீட் தர காலதாமதம் ஏற்பட்டு வருவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Vanankan, Yogibabu, surya, Surya 42 , Bala, 24th Nov 2022

இந்த நிலையில் இந்த கேப்பில் நிறுத்தப்பட்டிருந்த ‘வணங்கான்’ படத்தை முடித்துவிடலாம் என பாலா சூர்யாவிடம் கேட்ட நிலையில் அதற்கு சூர்யாவும் ஒப்பு கொண்டதாகவும், இதனையடுத்து ’வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.