துணிவு படத்தின் பாடல்கள் குறித்து கசிந்துள்ள தகவல்!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Boni Khapoor, H Vinoth, Aniruth, hiphop Thamizha, Ajith, Thunivu, 24th Nov 2022

மேலும் இந்தப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான ’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்றும் செம குத்து பாடலான இந்த பாடலை வைசாக் இயற்றி உள்ளார்.

Boni Khapoor, H Vinoth, Aniruth, hiphop Thamizha, Ajith, Thunivu, 24th Nov 2022

இதனை அடுத்து இரண்டாவது பாடலான ’காசேதான் கடவுளடா’ என்ற பாடலை ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ளார் என்று கூறப்படுகிறது. மூன்றாவது பாடல் புரமோஷன் பாடல் என்பதும் ’கேங்க்ஸ்டர்’ என்று தொடங்கும் இந்த பாடல் படம் ரிலீசுக்கு முன்பே வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Boni Khapoor, H Vinoth, Aniruth, hiphop Thamizha, Ajith, Thunivu, 24th Nov 2022

போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.