வாரிசு படக்குழுவினருக்கு வந்துள்ள சிக்கலுக்கு மேல் சிக்கல்

விஜய்யின் ’வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் வெளியிட அம் மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் பிரச்சனை செய்த நிலையில் தற்போது தான் அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளநிலையில் தற்போது ’வாரிசு’ படக்குழுவினர்களுக்கு மற்றுமொரு பிரச்சினை வந்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’ வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay, Vamsi, Varisu, 24th Nov 2022

இந்த நிலையில் சென்னை அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் உரிய அனுமதி இல்லாமல் யானை மற்றும் குதிரைகளை அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாகவும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது யானையை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி மட்டுமே படக்குழுவினர்களிடம் இருந்ததாகவும் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்த விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் தெரியவந்தது.

Vijay, Vamsi, Varisu, 24th Nov 2022

இந்த நிலையில் ’வாரிசு’ படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய அனுமதி இன்றி யானையை படப்பிடிப்புக்கு பயன்பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.