மீண்டும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வீட்டிலேயே அவரது சிகிச்சையை தொடர்ந்து வருவதாக செய்திகள் வெளியானது.

Samantha, 24th Nov 2022

இந்த நிலையில் நடிகை சமந்தாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் நேற்று மீண்டும் நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samantha, 24th Nov 2022

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் தவறானது என்றும் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் வீட்டிலேயே தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் சமந்தாவின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தகவலை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சமந்தா தற்போது உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.