கமல்ஹாசனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை!

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று ஐதராபாத் சென்று பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களை சந்தித்து ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Kamalhasaan, 24th Nov 2022

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கமல்ஹாசன் அவர்கள் நவம்பர் 23ஆம் தேதி லேசான காய்ச்சல் இருமல் மற்றும் ஜலதோஷம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது விரைவாக குணமாகி வருகிறார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்பாரா? அல்லது மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.