ஸ்ரீப்ரியாவின் வீட்டில் நிகழ்ந்த மரணம் – திரையுலகினர் இரங்கல்

திரையுலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Sripriya, 23th Nov 2022

பிரபல பரத நாட்டிய கலைஞரான நடேசன் பக்கிரிசாமி அவர்களின் மனைவி கிரிஜா பக்கிரிசாமி கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார். நடிகையும் இயக்குனருமான ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.

இவர் ’காதோடு தான் நான் பேசுவேன்’ என்ற படத்தை இயக்கி உள்ளதுடன் ஸ்ரீப்ரியா இயக்கிய ’நீயா’, ’நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த கிரிஜா பக்கிரிசாமிக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் உள்ளனர்.