‘தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம்’ – நடிகர் வேல ராமமூர்த்தி எச்சரிக்கை

தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் மட்டுமன்றி எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி பல திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இவர் ’குற்றப் பரம்பரை’ உள்ளிட்ட பல நூல்களை எழுதிய பிரபலமான எழுத்தாளரும் ஆவார்.

Vela Rammamurthy, 23th Nov 2022

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் பண மோசடி செய்யப்பட்டு வருவதாகவும் வேல ராமமூர்த்தி பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு பணம் கேட்டு ஒருசிலர் ஏமாற்றி வருவதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை அடுத்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:

நண்பர்களே, உஷார்! என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் பணம் கேட்டு ஏமாற்றுவதாக அறிகிறேன். தயவு செய்து யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version