நாக சைதன்யா படத்தின் டைட்டிலுடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு படக்குழுவினர் ’கஸ்டடி’ என்ற டைட்டில் வைத்துள்ள நிலையில் இந்த படத்தில் நாக சைதன்யா காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்தசாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதுடன் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

Exit mobile version