‘கையை பிடித்து தலைகுனிந்து வணங்கிய கமல்ஹாசன்’ – யாரை தெரியுமா?

கமல்ஹாசன் அவர்கள் பழம்பெரும் இயக்குனர் ஒருவரின் கையை பிடித்து தலைகுனிந்து வழங்கிய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Kamalhasaan, K Vishvanath, 23th Nov 2022

தெலுங்கு திரையுலகில் பல படங்களை இயக்கியுள்ளவர் இயக்குனர் கே.விஸ்வநாத் என்பதும் இவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கில் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் இவர் கமல்ஹாசன் நடித்த ‘சலங்கை ஒலி’, ’சிப்பிக்குள் முத்து’, ‘பாச வலை’ உள்பட ஒரு சில படங்களை இயக்கி உள்ள நிலையில் கமல்ஹாசனுடன் ’குருதிப்புனல்’, ’உத்தமவில்லன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் கே.விஸ்வநாத் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த நிலையில் அவரது கையைப் பிடித்து தலைகுனிந்து வணங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின்போது கே.விஸ்வநாத் குடும்பத்தினர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version