‘நீங்கள் தான் உலகின் சிறந்த மற்றும் அற்புதமான அம்மா’ – அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கௌதம் கார்த்திக்!

நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவியும் நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவுமான ராகினி இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது மகன் கௌதம் கார்த்திக் அவருக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

Karthik, Goutham Karthik, 23th Nov 2022

மேலும் கௌதம் கார்த்திக் தான் சிறுவயதில் அம்மா மற்றும் சகோதரனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. கௌதம் கார்த்திக் தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியிருப்பதாவது:

ஹாய் அம்மா!

இந்த சிறப்பு நாளில், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!

நீங்கள் தான் உலகின் சிறந்த மற்றும் அற்புதமான அம்மா. ஒவ்வொரு ஆண்டும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள்!

எங்களை வளர்ப்பதற்காக நீங்கள் உங்களுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தீர்கள், எங்களால் சொந்தக் காலில் நாங்கள் நிற்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி.

கடினமான காலங்களில் எங்களுக்கு அடைக்கலம் அளித்ததற்கும், எந்தச் சூழ்நிலையிலும் சிறப்பானதை நாங்கள் செய்ய எங்களுக்கு உதவியதற்கும் நன்றி.

இருள் எங்களை மூழ்கடிக்க முயன்றபோது உமது அன்பின் போர்வையால் எங்களை மூடியதற்கு நன்றி.

நீங்கள் எப்போதும் பிரகாசிக்கும் எங்கள் அதிசயப் பெண், எங்கள் சூப்பர் ஹீரோ!

நீங்கள் எங்கள் தேவதையாக இருந்தீர்கள், எப்போதும் இருப்பீர்கள்! ஒவ்வொரு நாளும் உங்களை எங்களுக்கு தந்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் நீலகிரி ராணி

இவ்வாறு கெளதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.