ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. நன்றி தெரிவித்த நடிகர்!

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜீத் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு தமிழ் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ என்ற தெலுங்கு படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 53 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெற உள்ளதாகவும் இந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Walder Viraiya, Chiranjeevi, 22th Nov 2022

இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில், ‘சிரஞ்சீவி அவர்கள் குறிப்பிடப்பட வேண்டிய நடிகர் என்றும் அவரது செழுமையான பணி மற்றும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்ததால் அவரை தலைமுறை தலைமுறையாக திரைப்பட ஆர்வலர்களுக்கு அவரை பிடிக்க வைத்துள்ளது என்றும் சாதனையாளர் விருது பெறும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்’ என்றும் கூறியுள்ளார்.

Walder Viraiya, Chiranjeevi, 22th Nov 2022

பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிரஞ்சீவி, ‘உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி என்றும் மிகுந்த தாழ்மையுடன் மரியாதையுடன் நான் இதை உணர்கிறேன்’ என்றும் பதில் தெரிவித்துள்ளார்.