நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி’ டிரைலர்!

முன்னணி பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் நேரடி ஓடிடி திரைப்படமான ’வதந்தி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ட்ரைலரில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் அடர்ந்த காட்டில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் சவால்கள் மற்றும் திரில்லான காட்சிகள் தான் இந்த படத்தின் கதை என்பது தெரிகிறது.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகிய இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம்மில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதுடன் சைமன் கிங் இசையமைத்த இந்த படம் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Exit mobile version