‘கைதி 2’ படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் இயக்கம் படங்களில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இருக்கும் என்பது அவரது ’மாஸ்டர்’, ’விக்ரம்’ ஆகிய படங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

Logesh Kangarj, Kaithi 2, Karthi, Ragawalawrence, Surya, 22th Nov 2022

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்திலும் பல முக்கிய நடிகர்கள் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியை ’மாஸ்டர்’ திரைப்படத்தில் ஆக்ரோஷமாக வில்லனாக காட்டிய லோகேஷ் கனகராஜ், ‘தளபதி 67’ படத்தில் வேற லெவல் வில்லன் கேரக்டர்களை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷின் அடுத்த படமான ’கைதி 2’ படத்திலும் பிரபலமான ஹீரோ ஒருவர் தான் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி நடித்த ’கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Logesh Kangarj, Kaithi 2, Karthi, Ragawalawrence, Surya, 22th Nov 2022

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ’கைதி 2’ திரைப்படத்தில் வேற லெவலில் செய்ய லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி ’விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரும் ‘கைதி 2’ படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்படுவதால் ’கைதி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.