‘இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் வேறு விதமான அனுபவத்தை பெறுவார்கள்’ – துணிவு படம் குறித்த தகவல்

பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகிய ‘துணிவு’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

H. Vinoth, Gipran, Ajith, Thunivu, 22th Nov 2022

மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹைலைட் காட்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

’சார்பாட்டா பரம்பரை’ நடிகர் ஜான் கொகைன் ‘துணிவு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் அஜித்துடன் மோதும் காட்சி தான் இந்த படத்தின் ஹைலைட் என்றும் இருவரும் மோதும் இந்த காட்சி தமிழ் திரையுலகிற்கு புதுமையானதாக இருக்கும் என்றும் இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் வேறு விதமான அனுபவத்தை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

H. Vinoth, Gipran, Ajith, Thunivu, 22th Nov 2022

மேலும் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரகனி, வீரா, அஜய், சிபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் கதையானது வங்கி கொள்ளை குறித்த கதையம்சம் கொண்டது என்றும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம், அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.