விஜய் ஹீரோவாக நடித்த முதல் திரைப்பட திகதியில் ‘வாரிசு’ செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகிய நிலையில் அடுத்த சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Vijay, Varisu, 22th Nov 2022

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தான் விஜய் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியானது. இந்த படம் வெளியானதை அடுத்து 30 ஆண்டுகள் விஜய் திரையுலகில் கொடிகட்டி பறப்பதை முன்னிட்டு இந்த பாடல் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Vijay, Varisu, 22th Nov 2022

மேலும் விஜய்யின் 30 வருட திரையுலக நாளை கொண்டாடும் வகையில் இந்தப்பாடல்
வெளியாகவிருப்பதாகவும் இந்த பாடலில் ’தளபதி’, ’அதிபதி’ ஆகிய வார்த்தைகளும் உள்ளதால் இந்த பாடல் அன்றைய தினம் வெளியாவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கருதியுள்ளனர்.