ஊரில் முதன் முதலில் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டும் அல்லாது பாக்ஸ் ஆபீஸ் கலக்சனின் சாதனை நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். ரஜினிக்கு அடுத்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்துவருவது இவரது படங்கள் தான்.

அண்மையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை அழைத்து சந்தித்தார் விஜய். இந்த சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் பேசியபோது, ‘ தங்களுடைய கிராமம் மிக சிறுது. எங்களுடைய கிராமத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது, தெரு வசதியும் கிடையாது. ஆனாலும் எங்கள் கிராமத்திற்கு விஜய் வந்தார்.

கொஞ்ச நேரம் எங்களுடன் இருந்துவிட்டு தான் சென்றார். எங்கள் ஊருக்கு அன்னதானம் எல்லாம் செய்துள்ளார். எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் அண்ணாவின் படங்களுடைய பெயர்களை தான் வைக்கிறோம்.

அப்படி அவர் மேல் வெறித்தனமான ரசிகர்களாக இருக்கிறோம். எங்கள் ஊருக்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார் விஜய். அதுமட்டுமின்றி முதன் முதலில் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தது எங்கள் கிராமத்தில் தான் ‘ என்று அந்த ரசிகர் மேலும் தெரிவித்துள்ளார்.