ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தமிழ் திரை உலகில் ’பரியேறும் பெருமாள்’, ’கர்ணன்’ மற்றும் ’மாமன்னன்’ ஆகிய மூன்று படங்களை மாரி செல்வராஜ் இயக்கியுள்ள நிலையில் இவர் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கவுள்ள நான்காவது படத்திற்கு ’வாழை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக மாரி செல்வராஜ் இயக்கி தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். மேலும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரியவுள்ளதுடன் சாண்டி நடன இயக்கத்தில் யுகபாரதி பாடல் வரிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.