நடிகை நீது சந்திராவை தரையில் இழுத்து செல்லும் காட்சி – வைரலாகும் வீடியோ

நடிகை நீதுசந்திரா ‘யாவரும் நலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் ’தீராத விளையாட்டுப் பிள்ளை’, ’ஆதிபகவன்’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

Neethu Chanthira, 21th Nov 2022

நீத்து சந்திரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த படத்தில் அவரை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை நீதுசந்திரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எந்த படத்திற்காக நடிகை நீது சந்திராவை தரதரவென இழுத்து செல்லும் காட்சி படமாக்கப்பட்டது என்பதை நீத்து சந்திரா குறிப்பிடவில்லை என்றாலும் சுந்தர் சி, அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒன் டு ஒன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தான் இது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை திருஞானம் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.