வெற்றிமாறனின் முக்கிய திரைப்படம் டிராப்பா? திரையுலகில் பரபரப்பு

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது என்பதும், இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் வெளியாக உள்ளத்துடன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் இறுதியில் வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

verrimaran, raghava lawrence, Viduthalai, Surya, Vadivasal, 21th Nov 2022

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ’அதிகாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள ஒரு திரைப்படம் உருவாக இருந்தது. இந்த படம் தற்போது டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது.

verrimaran, raghava lawrence, Viduthalai, Surya, Vadivasal, 21th Nov 2022

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே பல படங்களில் பிசியாக இருப்பதாகவும் நயன்தாராவின் 81வது படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருப்பதனாலும் ’அதிகாரம்’ படம் டிராப் ஆகிவிட்டது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.