அஜித்தின் படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்த பிரபல இயக்குனர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டாகி உள்ளது என்பதும் இதுவரை அவர் ஒரு தோல்வி படத்தை கூட இயக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Deena, Ajith, Logesh Kankaraj, 21th Nov 2022

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ’தளபதி 67’ இயக்க இருக்கும் நிலையில் படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்னரே அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் அந்த படத்தின் பிசினஸ் கூட ஆரம்பித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் அஜித்தின் எந்த படத்தை ரீமேக் செய்ய உங்களுக்கு விருப்பம் என்று கேட்டபோது அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ’தீனா’ படத்தை ரீமேக் செய்ய தனக்கு விருப்பம் என்று கூறியுள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான அஜித் நடித்த ’தீனா’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Deena, Ajith, Logesh Kankaraj, 21th Nov 2022

இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் கூறிய இந்த பதிலை அடுத்து விரைவில் அஜீத் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் இணைவார்கள் என்றும் அந்த படம் ஒரு வேளை ’தீனா’ ரீமேக் ஆக இருக்குமா? என்பதை காத்திருந்த்து பார்ப்போம்.