20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டாரின் படம்

கடந்த 2002ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’பாபா’. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இந்த படம் ரிலீஸானபோது ஒரு பிரபல அரசியல் கட்சி இந்த படத்திற்கு எதிராக பிரச்சனை செய்தது என்பதும் அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Suresh Krishna, Rajinikanth, Baba, 21th Nov 2022

இந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து ’பாபா’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்த படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உள்பட பல டிஜிட்டல் அம்சங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது வெளியாகும் ’பாபா’ படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு புது அனுபவம் ஏற்படும் என்றும் கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனின் ’ஆளவந்தான்’ திரைப்படம் மறுபடத்தொகுப்பு செய்யப்பட்டு விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரஜினியின் ’பாபா’ திரைப்படமும் வெளியாக உள்ளது.