யோகிபாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு – மாஸ் போஸ்டர் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக யோகி பாபு நடித்து வந்த நிலையில் தற்போது அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் அதுமட்டுமன்றி அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ‘மண்டேலா’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது.

Dennis Manjunath, Yogibabu, 20th Nov 2022

இந்த நிலையில் சமீபத்தில் யோகி பாபு நடித்த ’ட்ரிப்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்திலும் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ’தூக்குதுரை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

கே.எஸ் மனோஜ் என்பவர் இசையில் யோகி பாபு நாயகனாகவும் இனியா நாயகியாகவும் நடிக்கவுள்ளதுடன் மேலும் பலர் நடிக்க உள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவில் தீபக் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.