விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் ராணா நடித்த ‘கட்டா குஸ்தி’ பட ட்ரைலர்!

செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ராணா நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Sella Aiyavu, Vishnu Vishal, Rana, KaddaKushthi, 20th Nov 2022

இந்த ட்ரைலரில் அப்பாவியான, அடக்கமான பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் விஷ்ணு விஷாலுக்கு குஸ்தி போடும் ஒரு பெண் மனைவியாக கிடைத்துள்ளதை இந்த தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை காமெடியாக சொல்லும் படம் தான் ‘கட்டா குஸ்தி’ என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. காமெடி, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான படம் என்பதால் இந்த படம் நிச்சயம் விஷ்ணுவிஷாலுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழகத்தில் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ராணா உள்பட பலர் நடித்துள்ளதுடன் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி உள்ளது . தமிழில் ’கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கில் ’மட்டி குஸ்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.