எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் விஜய் பேசுவதில்லை – கோபமாக பதிலளித்த எஸ்.ஏ.சி.

தளபதி விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் விஜய் பேசுவதில்லை என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

SA Santhirasekar, Vijay, 19th Nov 2022

இந்த நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு கோபமாக பதிலளித்துள்ளார் அவர். அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘என் மகன் விஜய் என்னை மதிக்கவில்லை என்று நான் எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா? நான் 80 வயது அனுபவம் வாய்ந்த ஒரு மனிதன். என் வாழ்க்கையில் நான் பல அனுபவங்களையும், குடும்ப பிரச்சனைகளை பார்த்து இருக்கிறேன். அந்த அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இப்படி எல்லாம் இருக்க கூடாது என அறிவுரை கூறுகிறேன்.

SA Santhirasekar, Vijay, 19th Nov 2022

ஆனால் எல்லோரும் என் மகன் என்னை மதிப்பதில்லை என தவறாக கூறுகின்றனர். பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் விஜய் மாதிரி இந்த உலகத்தில் யாருமே சிறந்தவர் இல்லை’ என்று ஆவேசமாக கூறினார்.