’வாரிசு’ படத்தை குறுகிய மனப்பான்மையுடன் யாரும் பார்க்கக் கூடாது – இயக்குனர் லிங்குசாமியின் ஆவேச பதிவு!

வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது ஏற்கனவே தெரிந்ததே. இந்தநிலையில் பொங்கல் தினத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாக இருப்பதால் ’வாரிசு’ திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெலுங்கு திரையுலகில் கூறியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vijay, Lingusami, Varisu, Vamsi, Thilraju, 19th Nov 2022

’வாரிசு’ திரைப்படத்திற்கு பிரச்சனை செய்யக்கூடாது என ஏற்கனவே சீமான் கண்டன அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ’வாரிசு’ படத்திற்கு திரையரங்குகள் தரமாட்டோம் என்று கூறினால் அது வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனையை உருவாக்கும் என்றும் ’வாரிசு’ படத்திற்கு முன்பும் பின்பும் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்றும் கூறினார்.

Vijay, Lingusami, Varisu, Vamsi, Thilraju, 19th Nov 2022

தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இதற்கு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்றும் இரண்டு மொழி படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ’வாரிசு’ படத்தை குறுகிய மனப்பான்மையுடன் யாரும் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ’வாரிசு’ படத்திற்கு பிரச்சனை சிக்கல் ஏதும் வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வைக் கொண்டு வருவோம் என்றும் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.