உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ முதல் நாள் வசூல் குறித்த தகவல்

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘கலகத் தலைவன்’ திரைப்படம் நேற்று வெளியாகின நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றதுடன் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்துள்ளது.

Kalakaththaivan, Mahilthrumeni, Uthayanithi Stalin, 19th Nov 2022

நேற்றைய முதல் நாளில் இந்த படம் 2 முதல் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதுடன் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குடும்ப ஆடியன்ஸ்கள் பாசிடிவ் விமர்சனம் காரணமாக இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவதுடன் விமர்சன ரீதியில் மட்டுமின்றி வசூல் அளவிலும் நிச்சயம் வெற்றி படம் தான் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

மேலும் இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பு, மகிழ் திருமேனியின் கச்சிதமான திரைக்கதை ஆகியவை படத்தின் பாசிட்டிவ்வாக உள்ளன என்றும் குறிப்பாக பிக்பாஸ் ஆரவ்வின் வில்லத்தன நடிப்பும் இந்தப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் இந்த படம் விமர்சன அளவிலும் வசூல் அளவிலும் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.