தல படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிறுவனம்

துணிவு திரைப்படத்தை அடுத்து தல அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படமான ’ஏகே 62’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதுடன் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

Ajith, Thunivu, Ak62, Lyca Production, 19th Nov 2022

இந்த நிலையில் வரும் பொங்கல் திருநாளில் அஜீத்தின் ’துணிவு’ திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருந்தன.

Ajith, Thunivu, Ak62, Lyca Production, 19th Nov 2022

இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’துணிவு’ படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘அஜித் படத்துடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி’ என்று லைகா நிறுவனம் அந்த டுவீட்டில் தெரிவித்துள்ளது. மேலும் ’துணிவு’ படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இப்போதே திரையரங்குகளை புக் செய்யும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.