நடிகர் அருண் விஜய் பிறந்த நாளில் வெளியான சூப்பர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகியுள்ளது.

Arunvijay, Achcham Enbathu Ellaiyea, AL Vijay, GV Pirakash, 19th Nov 2022

நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Arunvijay, Achcham Enbathu Ellaiyea, AL Vijay, GV Pirakash, 19th Nov 2022

இன்று அருண்விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அருண்விஜய் ஒரு பெண் குழந்தையுடன் இருப்பது போன்ற போஸ்டர் உள்பட 2 போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Arunvijay, Achcham Enbathu Ellaiyea, AL Vijay, GV Pirakash, 19th Nov 2022