சற்குணம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிப்பில் உருவாகியுள்ள ’பட்டத்து அரசன்’என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

70 வயது கபடி வீரராக நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ள பட்டத்து இளவரசன் இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், பால சரவணன், ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையில் உருவாகி இந்த படத்திற்கு லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவும், முகமது ராஜா படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’பட்டத்து அரசன்’ படத்தின் டிரைலரில் உள்ள அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுவதுடன் குறிப்பாக 70 வயது கேரக்டரில் நடித்துள்ள ராஜ்கிரண் கபடி களத்தில் இறங்கும் ஆவேசமான காட்சி நிச்சயம் திரையரங்கில் கைதட்டல் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.