கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ்!

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ள நிலையில் நவம்பர் 28ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

Goutham Karthik, Manyima Mohan, 17th Nov 2022

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதுடன் இதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு இந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

Goutham Karthik, Manyima Mohan, 17th Nov 2022

இந்த நிலையில் இந்த திருமண அழைப்பிதழ் திரை உலக பிரபலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் திருமண அழைப்பிதழின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.