கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க பிரபல இயக்குநர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Karthi, Vijay Mildon, Jappan, 17th Nov 2022

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து வருவதுடன் புஷ்பா பட வில்லன் சுனில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ‘ஜப்பான்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபல இயக்குனர் விஜய்மில்டன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Karthi, Vijay Mildon, Jappan, 17th Nov 2022

மேலும் இயக்குனர் விஜய்மில்டன் ஏற்கனவே பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணி செய்துள்ளதுடன் ’கோலிசோடா’, ‘10 எண்றதுக்குள்ள’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.