‘தளபதி 67’ படத்தில் உலகநாயகனா? இயக்குனர் லோகேஷின் வேற லெவல் பிளான்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படத்தை அடுத்து விஜய் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Logesh Kanagaraj, Vijay, Thalapthy 67, Kamalhasaan, 17th Nov 2022

குறிப்பாக இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் இணைவதால் இந்தப் படம் இதுவரை இல்லாத அளவில் பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜயின் ’தளபதி 67’ படத்தில் கமல்ஹாசன் இணைய உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’விக்ரம்’ படத்தை கமல்ஹாசன் நடித்து தயாரித்த நிலையில் தற்போது ’தளபதி 67’ படத்தின் இணை தயாரிப்பாளராக கமல்ஹாசன் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஏற்கனவே 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்த நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Logesh Kanagaraj, Vijay, Thalapthy 67, Kamalhasaan, 17th Nov 2022

அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தின் கேரக்டரையே ’தளபதி 67’ படத்திலும் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழும்பியுள்ளது.