‘வாத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

Vaththi, Gv Pirakash, Danush, 17th Nov 2022

இந்தப் படம் 2023 ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் பொங்கலுக்கு பிறகு தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜிவி பிரகாஷ் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அடுத்தாண்டு வெளியாகவுள்ள ‘வாத்தி’ முதல் தனுஷ் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Vaththi, Gv Pirakash, Danush, 17th Nov 2022

தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.