‘பெரிய லட்சியங்களை அடைய முயலுங்கள்’ நடிகர் அஜித்தின் முக்கிய பதிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் மாஸ் நடிகர்களில் ஒருவருமான அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்றாலும் அவர் தனது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய தகவல்களை தனது மேனேஜர் மூலம் கூறி வருகிறார்.

Ajith, AK62, Thunivu, 17th Nov 2022

அந்த வகையில் அஜித் மேனேஜரின் டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் அஜித் கூறியதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: உங்களை சுற்றி பாசிட்டிவான நபர்களையும், உங்களை ஊக்கப்படுத்தும் நபர்களை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். நெகட்டிவிட்டி வேண்டவே வேண்டாம். பெரிய லட்சியங்களை அடைய முயலுங்கள்’ என அஜித் தெரிவித்துள்ளதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Ajith, AK62, Thunivu, 17th Nov 2022

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது தெரிந்ததே. இந்த இரு படங்கள் குறித்து பல நெகட்டிவ் பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவாகி வரும் சமயத்தில் அஜித்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதுடன் இந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ’ஏகே 62’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.