ஹன்சிகாவை அடுத்து திருமணம் தமன்னாவுக்கா? மாப்பிள்ளை யார்?

தமிழ் திரை உலகில் பிரபல நடிகையான ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளன.

Tammanah, 17th Nov 2022

‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2006ம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பின்னர் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் – இந்தியா நடிகையாக விளங்கி வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஓடிடியில் வெளியாகும் வெப்தொடர்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tammanah, 17th Nov 2022

இந்த நிலையில் நடிகை தமன்னா மும்பை தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் மும்பை தொழிலதிபரின் காதலை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நடிகை தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ உள்பட ஒருசில படங்களில் தமன்னா நடித்து வருவதுடன் திருமணத்திற்கு முன் அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் முடித்து விடுவார் என்று கூறப்படுகிறது.