Gabriella Charlton 17–11–2022
Gabriella Charlton – 17 November 2022 – ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி ஆளுமை மற்றும் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் பணிபுரியும் நடிகை ஆவார். கேப்ரில்லா சார்ல்டன் டிசம்பர் 18, 1999 சென்னையில் பிறந்தார். 2009 இல் ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நடன போட்டியில் பங்குபற்றிய இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்டார் விஜய்யின் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி நடனத் தொடரின் ஆறாவது சீசனிலும் பங்குபற்றி பட்டத்தை வென்றார்.
கேப்ரில்லா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இல் 18 ஹவுஸ்மேட்களில் ஒருவராக இருந்து போட்டியின் 102வது நாளில் 5 லட்சம் ரொக்கப் பணத்தைப் பரிசாக பெற்றுக் கொண்டு சுயவிருப்பின் பேரில் வெளியேறினார். அவர் பிபி ஜோடிகளில் போட்டியாளராக பங்கேற்று அந்தப் போட்டியின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இப்போது அவர் தொலைக்காட்சித் தொடரான ஈரமான ரோஜாவே பாகம் 2 இல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கேப்ரில்லாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த படங்களின் தொகுப்பு இதோ.