‘இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள்’ – ப்ரியா மரணம் குறித்து பிரபல இசையமைப்பாளர்

சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு சமீபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட தவறு காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது.

GV pirakash, 16th Nov 2022

இந்தநிலையில் ப்ரியாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய நிலையில் திரையுலக நட்ஷத்திரங்கள் இது குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ,ப்ரியாவின் மரணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

GV pirakash, 16th Nov 2022

“என் Game என்னை விட்டு போகாது, Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப் போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள், அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை’ என்று பதிவு செய்துள்ளார்.