அஜித்துடன் சேர்ந்து ரசிகர்களும் ஆடும் ஸ்டெப்ஸ் தான் கொடுத்திருக்கின்றேன் – ‘துணிவு’ குறித்து கல்யாண் மாஸ்டர்

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் ஒரு பாடல் குத்து பாடல் என்றும், இன்னொரு பாடல் கெத்து பாடல் என்றும், இன்னொரு பாடல் புரமோஷன் பாடல் என்றும் கூறப்பட்டுள்ளது.

Thunivu, kalyan, 16th Nov 2022

மேலும் இந்த படத்திற்கு நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணிபுரிந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது, ‘அனிருத் பாடிய ’சில்லா சில்லா’ என்ற பாட்டை கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்றும் கண்டிப்பாக இந்த பாடலை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்றும் இது ஒரு பாஸ்ட்ஃபேஸ் பாடல் என்பதால் திரையரங்குகளில் இந்த பாடல் ஒலிக்கும் போது திரையரங்கே அதிரும் என்றும் கூறினார்.

மேலும் அஜித்துக்கு இந்த படத்தில் சிம்பிள் ஸ்டெப்ஸ்களை மட்டுமே வைத்திருக்கிறேன் என்றும் கண்டிப்பாக அஜித்துடன் சேர்ந்து ரசிகர்களும் இணைந்து ஆடும் வகையில் இந்த பாடல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Thunivu, kalyan, 16th Nov 2022

மேலும் அஜித் அவர்கள், ‘அடிச்சு தூக்கு’, ‘ஆலுமா டோலுமா’ போன்ற பாடல்களை மிகவும் ரசித்து நடனமாடினார் என்றும் அதே போன்று தான் இந்த படத்தில் உள்ள ’சில்லா சில்லா’ பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.