மகாலட்சுமி கர்ப்பமா? ரவீந்தர் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் பரபரப்பு!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானதுடன் இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Ravindar, Mahaladshmi, 16th Nov 2022

ஆனால் அந்த சர்ச்சை எதையும் கண்டுகொள்ளாமல் ரவீந்தர் தனது மனைவியுடன் ஜாலியாக கோயில், குளம் என்று சுற்றி வந்ததுடன் மனைவிக்கு புத்தம் புதிய கார், பங்களா உள்பட பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்தார் என்பதும் தெரிந்ததே.

Ravindar, Mahaladshmi, 16th Nov 2022

இந்த நிலையில் சமீபத்தில் ரவீந்தர் தனது மனைவியுடன் ஓட்டலில் சாப்பிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை உற்று நோக்கிய நெட்டிசன்கள் மகாலட்சுமி வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து அவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற கேள்வியை கமெண்ட்ஸ் பகுதியில் எழுப்பியுள்ளனர். ஆனால் இது குறித்து ரவீந்தர் அல்லது மகாலட்சுமி எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.