சி.எம் அனுமதி கொடுத்த டைட்டில் தான் ‘கலகத் தலைவன்’

மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கலகத் தலைவன்’ என்ற திரைப்படம் வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

Kalakaththalaivan, Uthayanithi Stalin, Mahilthirumeni, 16th Nov 2022

மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்த நிலையில் ‘கலகத்தலைவன்’ டைட்டில் குறித்து இந்த படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது : இந்த கதையை எழுதும்போதே எனக்கு ‘கலகத் தலைவன்’ என்ற டைட்டில் மனதில் தோன்றி விட்டது என்றும் இந்த டைட்டிலை நான் உதயநிதியிடம் கூறியபோது அவர் சூப்பராக இருக்கிறது என்று கூறினார். இருப்பினும் நான் சிஎம் இடம் இந்த டைட்டில் குறித்து கலந்து பேசி அனுமதி வாங்கிய பிறகு முடிவு செய்யலாம் என்று கூறினார்.

Kalakaththalaivan, Uthayanithi Stalin, Mahilthirumeni, 16th Nov 2022

அதன் பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து அந்த டைட்டிலுக்கு சிஎம் அனுமதி கொடுத்துவிட்டார் என்று உதயநிதி கூறியதை அடுத்தே இந்த டைட்டிலை நாங்கள் அறிவித்தோம் என்று மகிழ்திருமேனி அந்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் இந்த டைட்டில் கதை மட்டுமல்ல உதயநிதிக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த டைட்டிலை நாங்கள் தேர்வு செய்தோம் என்று அவர் கூறினார்.

Kalakaththalaivan, Uthayanithi Stalin, Mahilthirumeni, 16th Nov 2022

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.